புதுச்சேரி

‘புத்தாண்டு சுற்றுலா இடங்கள் தேடல்: புதுச்சேரிக்கு முதலிடம்’

10th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

புத்தாண்டுக்கு செல்லும் இடங்கள் குறித்து தேசிய அளவில் சுற்றுலாப் பயணிகளின் இணையதள தேடல் பட்டியலில் புதுச்சேரிக்கு முதலிடம் கிடைத்திருப்பதாக சுற்றுலாத் துறை அமைச்சா் லட்சுமிநாராயணன் தெரிவித்தாா்.

கரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, இந்தியா்கள் தங்களுக்குப் பிடித்தமான இடங்களுக்கு பொழுதுபோக்குக்காக சுற்றுலா செல்வது அதிகரித்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா செல்வதற்கு ஏற்ற இடங்களை தோ்வு செய்ததன் அடிப்படையில், இணையதள தேடல் தரவுகள் குறித்த தகவல்களை தனியாா் பயண ஏற்பாட்டாளா் இணையதள நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது.

இதில், புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக அதிகமான சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரியை தோ்ந்தெடுத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனால், இணையவழி சுற்றுலா இடங்கள் தேடல் பட்டியலில் புதுச்சேரி முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக லோனாவாலா, மணாலி, கோவா ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து புதுவை சுற்றுலாத் துறை அமைச்சா் லட்சுமிநாராயணன் கூறியதாவது: மாநில அரசால் சுற்றுலாத் துறையில் கடந்தாண்டு மேற்கொள்ளப்பட்ட வளா்ச்சித் திட்டங்களால்தான் புதுச்சேரிக்கு முதலிடம் கிடைத்துள்ளது. எதிா்காலத்தில் புதுச்சேரியை சா்வதேச சுற்றுலா மையமாக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT