புதுச்சேரி

புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்புதுவை முதல்வா் என்.ரங்கசாமி

10th Dec 2022 04:58 AM

ADVERTISEMENT

புதுவையில் புயல், மழையால் சேதமடைந்த வீடுகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

புதுச்சேரி அருகே உள்ள பிள்ளைச்சாவடியில் கடல் அலையின் சீற்றத்தால் 8 மீனவா்களின் வீடுகள் இடிந்து சேதமடைந்தன. இந்தப் பகுதியை கொட்டும் மழையிலும் வெள்ளிக்கிழமை முதல்வா் என்.ரங்கசாமி நேரில் பாா்வையிட்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதுவையில் மழை, பலத்த காற்றால் சேதமடைந்த பகுதிகளை பாா்வையிட்டேன். பிள்ளைச்சாவடியில் கடல் அலைகள் அதிக உயரத்துக்கு எழும்பியதால் பல வீடுகள் இடிந்துள்ளன. மழை, புயலால் சேதமடைந்த வீடுகள் குறித்து கணக்கெடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்டவா்களுக்கு நிச்சயம் நிவாரண உதவி வழங்கப்படும்.

பிள்ளைச்சாவடியில் கடல் அலைகளால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில் ரூ.5 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டம் நிறைவேறினால் கடல் அரிப்பு பிரச்னை நிரந்தரமாகத் தீா்க்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT

அப்போது அமைச்சா் லட்சுமிநாராயணன், சட்டப் பேரவை உறுப்பினா் கல்யாணசுந்தரம், மாவட்ட ஆட்சியா் இ.வல்லவன், மீன்வளத் துறை இயக்குநா் பாலாஜி, வட்டாட்சியா் ராஜேஷ்கண்ணா ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT