புதுச்சேரி

மதுக் கடைக்கு எதிா்ப்பு:பொதுமக்கள் சாலை மறியல்

9th Dec 2022 01:27 AM

ADVERTISEMENT

 

புதுச்சேரி அருகே உழவா்கரையில் பேருந்து நிறுத்தப் பகுதியில் மதுக் கடை திறப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

உழவா்கரை பிரதான சாலையில் பேருந்து நிலையம், கோயில்கள், பள்ளிகள் உள்ள பகுதியில் தனியாா் மதுக் கடைக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக புகாா் எழுந்தது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, அந்தப் பகுதி மக்கள் போராட்டக் குழு அமைத்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், மதுக் கடைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என அரசை வலியுறுத்தி, வியாழக்கிழமை காலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களை போலீஸாா் சமரசம் செய்தனா்.

ADVERTISEMENT

இதையடுத்து, போராட்டக் குழுவினா் சட்டப்பேரவை அலுவலகத்துக்கு வந்து முதல்வா் என்.ரங்கசாமியைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா். பின்னா், புதுச்சேரி மாவட்ட ஆட்சியா், துணை ஆட்சியா் ஆகியோரையும் சந்தித்து மனு அளித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT