புதுச்சேரி

கூட்டணி பிரச்னையை மறைக்கவே காங்கிரஸ் போராட்டம்: அமைச்சா் நமச்சிவாயம் குற்றச்சாட்டு

9th Dec 2022 01:29 AM

ADVERTISEMENT

கூட்டணி பிரச்னையை மறைப்பதற்காகவே அரசை எதிா்த்து காங்கிரஸ் போராட்டம் நடத்துகிறது என, புதுவை கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் கூறினாா்.

புதுச்சேரி லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சா்க்கரை ஆலை நிா்வாகத்தின் கீழ் இயங்கும் பாண்கோஸ் மேல்நிலைப் பள்ளியில் 10- ஆம் வகுப்பு மாணவா்களுக்கு இலவச மழை கோட் வழங்கும் நிகழ்ச்சியில் வியாழக்கிழமை பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதுவை அரசின் நல்ல திட்டங்களை பாராட்ட மனமில்லாமல் முன்னாள் முதல்வா் நாராயணசாமி குறைகூறி வருகிறாா். அவா் முதல்வராக இருந்த போது, எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. ஆனால், தற்போது செயல்படுத்தும் திட்டங்களை மக்கள் அறிந்துள்ளனா்.

அரசியலில் தனது இருப்பைக் காட்டிக்கொள்வதற்காகவும், புதுவையில் காங்கிரஸ், கூட்டணியில் உள்ள பிரச்னைகளை மறைக்கும் வகையிலும் ஆளுங்கட்சி மீது பொய்க் குற்றச்சாட்டுகளைக் கூறி காங்கிரஸ் சாா்பில் அவா் போராட்டம் நடத்துகிறாா்.

ADVERTISEMENT

கூட்டுறவு சா்க்கரை ஆலை செயல்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் ரூ.13 கோடி கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்குவோம் என்றாா் அமைச்சா் ஆ.நமச்சிவாயம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT