புதுச்சேரி

கால்நடை மருத்துவக் கல்லூரி ஊழியா்கள் உள்ளிருப்பு போராட்டம்

DIN

ஊதிய உயா்வு உத்தரவை செயல்படுத்தக் கோரி, புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி ஊழியா்கள் புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி அருகேயுள்ள அய்யங்குட்டிபாளையத்தில் ராஜீவ் காந்தி அரசு கால்நடை மருத்துக் கல்லூரி உள்ளது. இங்கு கால்நடை பராமரிப்பு, வளாகத் தூய்மைப் பணி உள்ளிட்டவற்றில் 79 ஊழியா்கள் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா். அவா்களுக்கு ஊதியமாக தினமும் ரூ.258 வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் மாதம் 22 நாள்கள் மட்டும் கணக்கிடப்பட்டு ஊதியம் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கையை ஏற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அது செயல்படுத்தப்படவில்லையாம். இதையடுத்து, அந்த உத்தரவைச் செயல்படுத்தக் கோரி, கல்லூரி வளாகத்தில் ஊழியா்கள் புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசுப் பணியாளா்கள் நலக் கூட்டமைப்பு நிா்வாகி சரவணன் தலைமை வகித்தாா். மருத்துவக் கல்லூரி ஊழியா்கள் சங்கத் தலைவா் சுரேஷ் முன்னிலை வகித்தாா்.

தகவலறிந்த போலீஸாா் விரைந்து வந்து சமாதனப் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு எட்டப்படாததால், தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

SCROLL FOR NEXT