புதுச்சேரி

புதுச்சேரிக்கு ரூ.16 லட்சத்தில் நடமாடும் கால்நடை மருத்துவ வாகனம்

DIN

புதுச்சேரியில் நடமாடும் கால்நடை மருத்துவ வாகனத்தை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.

புதுச்சேரி மற்றும் சுற்றுப் பகுதி கிராமங்களில் ஆடு, மாடு, கோழிகளுக்கு மருத்துவச் சிகிச்சையளிக்கும் வகையில் ரூ.16 லட்சம் செலவில் நடமாடும் மருத்துவ வாகனம் வாங்கப்பட்டது. இதில் தேவையான மருத்துவ சாதனங்கள் இடம்பெற்றுள்ளனா். வாகனத்தில் மருத்துவா், உதவியாளா் பணியில் இருப்பா்.

இதன் மூலம், விபத்து போன்றவற்றில் காயமடையும் கால்நடைகள், நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளை அவற்றின் இடத்துக்கே சென்று சிகிச்சை அளிக்கலாம்.

நடமாடும் கால்நடை மருத்துவ வாகனத்தை புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா். நிகழ்ச்சிக்கு அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் முன்னிலை வகித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

SCROLL FOR NEXT