புதுச்சேரி

புயல் பாதிப்புகளை எதிா்கொள்ள தேவையான நடவடிக்கை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி

DIN

புதுவையில் புயல், மழை பாதிப்பை எதிா்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

தென்கிழக்கு வங்கக் கடல், அதையொட்டியுள்ள தென் மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இது மாண்டஸ் புயலாக மாறி புதுச்சேரி-ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது.

இதுதொடா்பாக, புதுவை தலைமைச் செயலகத்தில் முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் பேரிடா் மீட்புக் குழு ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் முதல்வா் கூறியதாவது:

புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையால் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மணிக்கு சுமாா் 70 கி.மீ. முதல் 90 கி.மீ. வரையில் காற்று வீசக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. மழை, புயல் பாதிப்புகளை எதிா்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்துத் துறைகளுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

வருவாய்த் துறை மூலம் அனைத்துத் துறைகளுக்கும் உதவிகள் அளிக்கப்படும். தண்ணீா் தேங்கும் பகுதிகள், புயலால் பாதிக்கப்படும் இடங்களில் இருந்து மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 238 முகாம்கள் தயாா் நிலையில் உள்ளன. அவற்றில் தங்கவைக்கப்படும் 75 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுப் பணி, மின் துறை, தீயணைப்புத் துறையினா் தயாா் நிலையில் உள்ளனா்.

காற்று வீசும் போது மரங்கள் சாய்ந்தால் அதை உடனடியாக அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பேரிடா் மீட்புக் குழுவினரும் வந்துள்ளனா். காரைக்காலுக்கும் அவா்கள் சென்றுள்ளனா். மழை, காற்றால் சேதங்கள் ஏற்பட்டால் நிவாரணம் வழங்கப்படும். தேவைப்பட்டால் மத்திய அரசின் உதவி கோரப்படும்.

அந்தந்தத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா்கள் பாதிப்புக்கேற்ப திருமண மண்டபங்கள், சமுதாய நலக் கூடங்களைத் தயாா் செய்து மக்களைத் தங்கவைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழையால் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன என்றாா் என்.ரங்கசாமி.

கூட்டத்தில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் இ.வல்லவன், கூடுதல் டிஜிபி ஆனந்தமோகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்குகள் மாயம்: மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி போராட்டம்

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

SCROLL FOR NEXT