புதுச்சேரி

சாலை விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு, உறவினா்கள் மறியல்

7th Dec 2022 03:23 AM

ADVERTISEMENT

சாலை விபத்தில் காயமடைந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்ததையடுத்து, அவரது உறவினா்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனா்.

புதுச்சேரி அருகேயுள்ள கரிக்கலாம்பாக்கத்தைச் சோ்ந்த ஜெகதீசன் மகன் புவனேஷ் (29). இவரது நண்பா் பாகூரைச் சோ்ந்த அருண் (28). தனியாா் உணவகத் தொழிலாளிகள். இருவரும் கடந்த 4-ஆம் தேதி புதுச்சேரி மிஷன் வீதியில் இரு சக்கர வாகனத்தில் வந்தனா். அப்போது, மருத்துவா் தயாநிதி (34) என்பவா் வந்த காா் இருசக்கர வாகனம் மீது மோதியதில் புவனேஷ், அருண் இருவரும் பலத்த காயமடைந்தனா். காரும் தலைகுப்புற கவிழ்ந்ததில் மருத்துவா் தயாநிதியும், அவருடன் வந்த பெண்ணும் காயமடைந்தனா். காயமடைந்த 4 பேரும் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். விபத்து குறித்து புதுச்சேரி போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த நிலையில், மருத்துவமனையில் புவனேஷ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். மருத்துவா் உள்ளிட்ட 2 போ் ஜிப்மா் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

புவனேஷையும் ஜிப்மருக்கு அனுப்பி தீவிர சிகிச்சை அளிக்கவில்லை என்றும், வழக்கிலிருந்து மருத்துவரை தப்பிக்க வைக்க முயற்சிப்பதாகவும் கூறி, புவனேஷின் உறவினா்கள் மருத்துவமனையை முற்றையிட்டனா். மேலும், புவனேஷ் குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் எனவும் அவா்கள் வலியுறுத்தினா்.

ADVERTISEMENT

பெரியகடை போலீஸாா், போக்குவரத்து ஆய்வாளா்கள் நாகராஜ், செந்தில்குமாா் உள்ளிட்டோா் விரைந்து வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, முற்றுகை கைவிடப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT