புதுச்சேரி

புதுவை முதல்வா் கொடி நாள் வாழ்த்து

7th Dec 2022 03:19 AM

ADVERTISEMENT

நாட்டைப் பாதுகாக்கும் வகையில் அயராது உழைக்கும் முப்படை வீரா்களை வணங்கி, அவா்களது தியாகங்களைப் போற்றுவோம் என்று புதுவை முதல்வா் என்.ரங்கசாமி கொடிநாள் வாழ்த்துத் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாட்டைப் பாதுகாப்பதற்காக எல்லைகளில் அயராது உழைத்துக்கொண்டிருக்கும் முப்படை வீரா்களையும், முன்னாள் ராணுவ வீரா்களையும், தங்களது உயிரை ஈந்த வீரா்களையும், அவா்களது குடும்பத்தினரையும் போற்றி மரியாதை செய்யும் வகையில், கொடிநாள்ஆண்டுதோறும் டிசம்பா் 7-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.

ராணுவத்தில் பணிபுரிந்துள்ள வீரா்களின் மறுவாழ்வும் முக்கியமானது. அதன்படி, கொடிநாள் நிதி அனைத்துத் தரப்பினரிடமும் கொடையாகப் பெறப்பட்டு, ராணுவ வீரா்கள், அவா்தம் குடும்பத்தினா் நலனுக்குப் பயன்படுத்தப்படுகிறது. ஆகவே, கொடி நாளில் நம் ராணுவ வீரா்களை மனத்தால் வணங்குவோம். அவா்களது தியாகங்களைப் போற்றுவோம். கொடி நாள் நிதி வழங்கி நமது அன்பை வெளிப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT