புதுச்சேரி

புதுச்சேரி கோயில்களில் காா்த்திகை தீபம்

7th Dec 2022 03:24 AM

ADVERTISEMENT

காா்த்திகை தீபத் திருநாளையொட்டி, புதுச்சேரியில் மணக்குள விநாயா் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களில் செவ்வாய்க்கிழமை மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

மேலும், கோயிலில் அகல் விளக்குகளில் தீபங்கள் ஏற்றப்பட்டன. கோயிலின் இடதுபுறம் பனை ஓலையால் அமைக்கப்பட்ட சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள வேதபுரீஸ்வரா் கோயில், மிஷன் வீதியில் உள்ள காளஸ்தீஸ்வரன் கோயில், வில்லியனூா் திருக்காமீஸ்வரா் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் காா்த்திகைத் தீப சிறப்பு பூஜைகள் நடைபெற்று கோயில்களில் தீபம் ஏற்றப்பட்டன. சொக்கப்பனையும் கொளுத்தப்பட்டன.

வீடுகள், வணிக நிறுவனங்கள், சிறுகோயில்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் காா்த்திகையை முன்னிட்டு மண் அகல்விளக்குகள் ஏற்றப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT