புதுச்சேரி

புதுச்சேரியில் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

7th Dec 2022 03:21 AM

ADVERTISEMENT

அம்பேத்கரின் 66-ஆவது நினைவு தினத்தையொட்டி, புதுவை சட்டப்பேரவை வளாகம் எதிரேயுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து, அரசு சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், க. லட்சுமி நாராயணன் உள்ளிட்டோரும் மாலை அணிவித்தனா்.

காங்கிரஸ் சாா்பில் மாநிலத் தலைவா் ஏ.வி.எஸ். சுப்பிரமணியன் தலைமையில் முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, மக்களவை உறுப்பினா் வி.வைத்திலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினா் மு.வைத்தியநாதன் உள்ளிட்டோா் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.

திமுக சாா்பில் அதன் மாநில அமைப்பாளா் ஆா்.சிவா தலைமையில் அந்தக் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அதிமுக சாா்பில் மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் மாலை அணிவித்தாா்.

ADVERTISEMENT

மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் ஆா்.ராஜாங்கம், திராவிடா் கழகம் வீரமணி, மதிமுக சாா்பில் கபீரியேல், விடுதலைச்சிறுத்தைகள் முதன்மைச் செயலா் தேவ.பொழிலன், தமிழக சட்டப்பேரவை உறுப்பினா் செல்வப்பெருந்தகை, பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் கணபதி ஆகியோரும், அமமுக சாா்பில் எஸ்.டி.சேகா் தலைமையிலும் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT