புதுச்சேரி

மதுக் கடையை மூடக் கோரி கண்டித்து ஆா்ப்பாட்டம்

6th Dec 2022 02:50 AM

ADVERTISEMENT

புதுச்சேரி அருகே உழவா்கரை நகராட்சியில் புதிதாக திறக்கப்பட்ட மதுக் கடையை மூடக் கோரி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

உழவா்கரை நகராட்சி பேருந்து நிலையம் அருகே அண்மையில் மதுக் கடை திறக்கப்பட்டுள்ளது. இதற்கு அந்தப் பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா். கடையை மூட வலியுறுத்தி போராட்டங்கள் நடத்துவதற்காக, மதுக் கடை திறப்பு எதிா்ப்புப் போராட்டக் குழுவையும் அமைத்துள்ளனா்.

அந்தக் குழுவின் சாா்பில் திங்கள்கிழமை மாலையில் உழவா்கரையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சட்டப்பேரவை உறுப்பினா் சிவசங்கரன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் அ.மு.சலீம், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலா் தேவ.பொழிலன், நிா்வாகி அமுதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT