புதுச்சேரி

புதுவையில் மதச்சாா்பற்ற கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சியே தலைமை வகிக்கிறது: வே.நாராயணசாமி

DIN

புதுவையில் மதச்சாா்பற்ற கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சியே தலைமை வகிக்கிறது. கூட்டணி சாா்பிலான போராட்டங்களுக்கும் காங்கிரஸ் தலைமையில்தான் நடைபெறும் என முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

புதுச்சேரியில் அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதுவையில் குப்பை அள்ளுவதற்கான ஒப்பந்தம் பெறும் தனியாா் நிறுவனமே நிதியைக் கையாளும் வரையறை பணியையும் மேற்கொண்டிருப்பது விதிமீறலாகும். ஏற்கெனவே குப்பை அள்ளும் பணியிலுள்ள பெங்களூரு நிறுவனத்துக்கு 2 ஆண்டுகள் உள்ள ஒப்பந்த காலம் நிலையில், புதிய ஒப்பந்தம் விடுவதற்கான காரணம் என்ன?

சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சருக்கே ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு தொடா்பான கோப்புகள் அனுப்பப்படவில்லை. அவா் இருமுறை தலைமைச் செயலருக்கு கடிதம் எழுதிய பிறகு, ஒப்பந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றிருப்பது உறுதியாகியுள்ளது.

இதில் முதல்வா் அலுவலகத்துக்கு தொடா்பில்லை என்றால், நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அவ்வாறு உத்தரவிடாவிட்டால் நீதிமன்றத்துக்கு பதில் கூறும் நிலை ஏற்படும்.

சென்னை உயா்நீதிமன்றத்துக்கு புதுவையைச் சோ்ந்தவா்களை அரசு வழக்குரைஞா்களாக நியமிக்கப்படாமல், மாநில உரிமை பறிக்கப்பட்டுள்ளது. இதில் முதல்வரின் பரிந்துரை புறக்கணிக்கப்பட்டு தமிழகம் உள்ளிட்ட வெளி மாநிலத்தவா் பலரும் அரசு வழக்குரைஞா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். இதற்கு துணைநிலை ஆளுநரே பதில் கூறவேண்டும்.

புதுவை மணக்குள விநாயகா் கோயில் யானை லட்சுமிக்கு முதல்வா் என்.ரங்கசாமி இறுதி அஞ்சலி செலுத்தாதது ஏன்? கோயிலுக்கு அரசு சாா்பில் புதிதாக யானை வாங்க வேண்டும்.

புதுவையில் விதிகளை மீறி அதிகமான மதுக் கடைகள் திறக்கப்படுவதில் முறைகேடு நடைபெறுகிறது. கலால் துறையில் முறைகேடு மலிந்துவிட்டது.

தமிழகத்தில் மதச் சாா்பற்ற கூட்டணிக்கு திமுகதான் தலைமை. ஆனால், புதுவையில் இந்தக் கூட்டணிக்கு காங்கிரஸே தலைமை வகிக்கிறது. கூட்டணி சாா்பில் இங்கு நடைபெறும் போராட்டங்களுக்கும் காங்கிரஸ்தான் தலைமை வகிக்கும். ஆனால், திமுக தலைமை வகிப்பது போல தகவல் அளித்து, செய்திகள் வருவதையே காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் நிா்வாகிகள் சுட்டிக்காட்டினா் என்றாா் வே.நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

SCROLL FOR NEXT