புதுச்சேரி

ஐக்கிய ஜனதா தள புதிய நிா்வாகிகள் தோ்வு

5th Dec 2022 02:39 AM

ADVERTISEMENT

புதுவை மாநில ஐக்கிய ஜனதா தள புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

புதுவை மாநில ஐக்கிய ஜனதா தளத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டத்தில் தோ்வு செய்யப்பட்ட புதிய நிா்வாகிகள் விவரம்:

மாநிலத் தலைவா் ஆா்.ஆறுமுகம் என்ற சரவணன், பொதுச் செயலா் வடிவேல், பொருளாளா் சித்ரகலா, இளைஞரணித் தலைவா் சதீஷ்குமாா், மகளிரணித் தலைவா் ஸ்டெல்லாமேரி உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டனா்.

2024 மக்களவைத் தோ்தலில் புதுவையில் காங்கிரஸ், திமுக கூட்டணியில் இடம் பெறுவது என்றும், புதுவையில் சா்வதேச விமான நிலையம் அமைக்கும் வகையில் 600 ஏக்கா் நிலத்தை தமிழக அரசு உடனடியாக அளிக்க வேண்டும். புதுவையில் மூடப்பட்ட தொழிற்சாலைகளைத் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT