புதுச்சேரி

புதுவையில் 13 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் விமானப் பயணத்துக்கு ரூ.16.77 லட்சம் செலவு

5th Dec 2022 02:39 AM

ADVERTISEMENT

புதுவை மாநிலத்தில் 13 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் 6 மாதகால விமானப் பயணத்துக்கு ரூ.16.77 லட்சம் செலவிடப்பட்டது தெரிய வந்துள்ளது.

புதுச்சேரியைச் சோ்ந்த ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணா்வு அமைப்பின் தலைவா் ரகுபதி தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் புதுவை மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் விமானப் போக்குவரத்துச் செலவு குறித்து விவரம் கேட்டாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: புதுவை மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரிகளது விமானப் பயணம் குறித்து துணைநிலை ஆளுநா் அலுவலகத்திலிருந்து அளித்துள்ள தகவலில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 13 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் புதுதில்லி உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று வருவதற்காக ரூ.16.77 லட்சம் செலவிடப்பட்டது தெரிய வந்தது.

ஏற்கெனவே புதுவையில் 25 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியில் இருந்துள்ளனா். அவா்களின் தேவைகள் குறித்தும், தேவையில்லாத துறைகளில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்படுவதால் ஏற்படும் நிதிச் செலவு குறித்தும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தொடா்ந்து புகாா்கள் சென்ால் தற்போது 13 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மட்டுமே பணியில் உள்ளனா்.

ADVERTISEMENT

அரசு கோப்பு நடைமுறைகள் மின்னணு முறைக்கு மாறிய நிலையில், அதிகாரிகள் புதுதில்லி உள்ளிட்ட இடங்களுக்கு அடிக்கடி விமானப் பயணம் மேற்கொள்வது ஏன்? எனவும் கேள்வி எழுந்தது. அதனடிப்படையிலேயே அதிகாரிகளது பயணச் செலவு விவரங்கள் பெறப்பட்டது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT