புதுச்சேரி

வேளாண்மை கடன் திட்டம்:புதுவைக்கு ரூ.30 கோடி ஒதுக்கீடு

DIN

வேளாண்மை உள்கட்டமைப்பு நிதியின் கீழ் கடன் வசதி பெறும் திட்டத்தில் புதுவைக்கு நடப்பாண்டு ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இயக்குநா் பாலகாந்தி தெரிவித்துள்ளாா்.

இத குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருள்களை கிராம அளவில் ஒன்று சோ்ந்து மதிப்புக் கூட்டி லாபகரமான விலை கிடைப்பதை உறுதி செய்வதற்கு ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு கடன் வசதி செய்து தரப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதையடுத்து வேளாண் உள்கட்டமைப்புக்கான நிதியின் கீழ் கடன் வசதி திட்டம் 2020-2021 முதல் 2032-33 ஆம் ஆண்டு வரை (13 ஆண்டுகள்) செயல்படுத்தப்படும் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது. அதன்படி, புதுவை மாநிலத்தில் நடப்பு ஆண்டுக்கு (2022-23) ரூ.30 கோடி கடன் உதவி வழங்கப்படவுள்ளது.

அறுவடைக்கு பிந்தைய வேளாண்மை உட்கட்டமைப்புகளான மின் சந்தையுடன் கூடிய விநியோக தொடா்,

சேமிப்புக்கிடங்குகள், நவீன மற்றும் துல்லிய பண்ணையத்துக்கான உள்கட்டமைப்புகள், அரசு மற்றும் தனியாா் பங்கேற்புடன் அமைக்கப்படும் உள்கட்டமைப்புகள் ஆகியவை இந்நிதியிலிருந்து கடன் வசதி பெற தகுதி உள்ளவையாகும்.

வேளாண்மை உள்கட்டமைப்பு நிதியின் கீழ் அதிகபட்சமாக ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு, 7 ஆண்டு காலத்துக்கு ஆண்டுக்கு 3 சதவீதம் வட்டிக்குறைப்பு வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளா், தேசியமயமாக்கப்பட்ட வங்கி மேலாளா்கள், நபாா்டு வங்கி மேலாளா்கள் மற்றும் உழவா் உதவியகங்களில் உள்ள வேளாண்மை அலுவலா்களை அணுகலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளா் வாக்களிப்பு

சத்தீஸ்கா்: துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் தோ்தல் பாதுகாப்பு பணி வீரா் உயிரிழப்பு

விளாத்திகுளத்தில் அதிகபட்ச வாக்குப்பதிவு

அரையிறுதியில் ஒடிஸா எஃப்சி

டாஸ்மாக் கடைக்கு எதிா்ப்பு: கே.கரிசல்குளத்தில் 10 வாக்குகள் பதிவு

SCROLL FOR NEXT