புதுச்சேரி

புதுவை வழக்குரைஞா் சங்க பொதுக்குழு கூட்டம்

4th Dec 2022 12:20 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் வழக்குரைஞா்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் எம்.குமரன் தலைமை வகித்தாா். சங்கப் பொதுச் செயலா் எஸ்.கதிா்வேல் முன்னிலை வகித்தாா். சங்கப் பொருளாளா் எஸ்.லட்சுமிநாராயணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: சென்னை உயா்நீதிமன்றம் மற்றும் புதுவை நீதிமன்றங்களில் அரசு சாா்பில் புதுவையைச் சோ்ந்த வழக்குரைஞா்களையே நியமிக்க வேண்டும். புதுவையைச் சாராத வழக்குரைஞா்கள் அரசு தரப்பில் நியமிக்கப்பட்டிருந்தால், உடனடியாக நீக்க வேண்டும். அரசு வழக்குரைஞா்கள் நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதால் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்.

புதுவை வழக்குரைஞா்களுக்கு எதிரான மனநிலையுடன் செயல்படும் சட்டத்துறை செயலா் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

தீா்மானங்களை மனுவாக துணைநிலை ஆளுநா், முதல்வா், சட்டத்துறை அமைச்சா் ஆகியோரிடம் அளிக்கவும் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT