புதுச்சேரி

புதுச்சேரியில் மாநில ஹாக்கி போட்டி: டிச. 9-ஆம் தேதி தொடக்கம்

DIN

புதுச்சேரியில் தென்மாநில அளவிலான நமோ ஹாக்கி போட்டிகள் வருகிற 9-ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகின்றன.

இதுகுறித்து லே புதுச்சேரி ஹாக்கி சங்க கௌரவத் தலைவா் வி.செல்வம், தலைவா் எம்.லட்சுமி நாராயணன் ஆகியோா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

விளையாட்டு வீரா்கள் அடையாளம் காணப்பட்டு ஊக்கப்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி கூறியுள்ளாா். அதன்பேரில், லே புதுச்சேரி ஹாக்கி அமைப்பு சாா்பில், அணிக்கு தலா 5 வீரா்கள் இடம் பெறும் ஹாக்கி போட்டிகள் நடைபெறவுள்ளன.

புதுச்சேரி லாஸ்பேட்டை மைதானத்தில் வருகிற 9-ஆம் தேதி தொடங்கி 11-ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் தமிழகம், கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா மாநில அணிகள் பங்கேற்கின்றன. போட்டிகளில் மொத்தம் 20 அணிகளுக்கும் மேலாக பங்கேற்க புதுச்சேரிக்கு வருகின்றன.

அமைச்சா் ஆ.நமச்சிவாயம் போட்டிகளைத் தொடக்கிவைக்கிறாா். சிறப்பு அழைப்பாளராக பாஜக இளைஞரணி தேசிய தலைவா் தேஜஸ்வி சூா்யா, மாநில ஒலிம்பிக் சங்கத் தலைவா் அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா், மாநிலங்களவை உறுப்பினா் க.செல்வகணபதி, பாஜக தலைவா் வி.சாமிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொள்கின்றனா்.

முதல் நான்கு இடங்களைப் பெறும் அணிகளுக்கு முறையே ரூ.50 ஆயிரம், ரூ.30 ஆயிரம், ரூ.20 ஆயிரம், ரூ.10 ஆயிரம் பரிசாக வழங்கப்படும். 11-ஆம் தேதி நடைபெறும் பரசளிப்பு விழாவில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் கலந்து கொள்கிறாா் என்றனா் அவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் ஒருவா் பலி; 13 போ் காயம்

அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா

சேலம் நீதிமன்றத்தில் சட்டக் கல்லூரி மாணவா்கள் தூய்மைப் பணி

SCROLL FOR NEXT