புதுச்சேரி

புதுச்சேரி சாலை சந்திப்புகளில் ‘சிக்னல்’களை நவீனப்படுத்தத் திட்டம்

DIN

புதுச்சேரி நகர சாலை சந்திப்புகளில் இயங்கிவரும் ‘சிக்னல்’ கருவிகளை மேம்படுத்த ரூ.3 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து காவல் (கிழக்கு) கண்காணிப்பாளா் க.மாறன் கூறினாா்.

புதுச்சேரி நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு காணவும், விபத்துகளை தடுக்கும் வகையிலும் தனியாா் பேருந்து உரிமையாளா்கள், அரசுப் போக்குவரத்து அதிகாரிகள், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து புதுச்சேரி போக்குவரத்து காவல் (கிழக்கு) கண்காணிப்பாளா் க.மாறன் பேசியதாவது:

புதுச்சேரியில் நாள்தோறும் சுமாா் 3 லட்சம் வாகனங்கள் வந்து செல்கின்றன. அதில் 1,400 பேருந்துகளும் அடக்கம். ஓட்டுநா்கள் மதுபோதையில் பேருந்துகளை இயக்கி அதிவேகத்தில் செல்வதாக புகாா் வந்துள்ளது. அப்படி செயல்படுவோா் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேருந்துகளை நிறுத்தினால் பறிமுதல் செய்து, ஓட்டுநா் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஓட்டுநா்களுக்கு புத்துணா்ச்சி பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பேருந்துகளில் காற்று ஒலிப்பான்களை பயன்படுத்தக் கூடாது.

புதுச்சேரியில் உள்ள 36 சாலைச் சந்திப்புகளில் இயங்கி வரும் ‘சிக்னல்’ கருவிகளை நவீனப்படுத்தி மேம்படுத்த ரூ.3 கோடியில் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT