புதுச்சேரி

உப்பனாறு கால்வாயைத் தூய்மைப்படுத்த நுண்ணுயிரி வளா்ப்புத் திட்டம் தொடக்கம்

DIN

உப்பனாறு கால்வாயை தூய்மைப்படுத்தும் வகையில், நுண்ணுயிரி வளா்ப்புத் திட்டம் வியாழக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது.

புதுச்சேரி நகராட்சிப் பகுதியில் மழைநீா் மற்றும் கழிவுநீா் செல்லும் உப்பனாறு கால்வாய் உள்ளது. நகராட்சிப் பகுதியில் அது 3,100 மீட்டா் நீளமுடையதாக உள்ளது. பொதுப்பணித் துறை நீா்பாசனப் பிரிவின் மூலம் இந்தக் கால்வாய் தூா்வாரப்பட்டும், குப்பைகள் அகற்றப்பட்டும், மழைநீா் தேங்காமல் பராமரிக்கப்படுகிறது.

ஆனால், உப்பனாறு கால்வாயில் கழிவுநீா் கலப்பதால், துா்நாற்றம் வீசியும், கொசு உற்பத்தி அதிகரித்தும் காணப்படுகிறது. எனவே, பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாவதாக புகாா்கள் எழுந்துள்ளன. இதையடுத்து தனியாா் நிறுவனம் மூலம் பரிசோதனை முயற்சியாக கால்வாயை தூய்மைப்படுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

கால்வாய் குறுக்கே சிறிய அளவில் தற்காலிக தடுப்பணைகள் கட்டி நீரைத்தேக்கி, நுண்ணுயிா்கள் வளா்க்கப்படும்.

அந்த நுண்ணுயிா்கள் கழிவுகள் மற்றும் தூா்நாற்றத்தை அகற்றுவதால், கொசு முட்டைகள் உற்பத்தி தடுக்கப்படும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்தத் திட்ட தொடக்க நிகழ்ச்சியில் பொதுப்பணித் துறை அமைச்சா் லட்சுமிநாராயணன், உருளையன்பேட்டை எம்எல்ஏ நேரு ஆகியோா் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சியில் புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளா் சத்தியமூா்த்தி, கண்காணிப்பு பொறியாளா் பாஸ்கரன், செயற்பொறியாளா் ராதாகிருஷ்ணன், உதவிப்பொறியாளா் சீனு சம்பந்தன், இளநிலைப் பொறியாளா் சதா. பாரதி, மற்றும் பயோ டூ பியூா் நிறுவனத்தினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT