புதுச்சேரி

வீட்டு கடன் வாங்கித் தருவதாக ரூ.2.50 கோடி மோசடி: தாய், மகன் கைது

2nd Dec 2022 03:18 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் வீடு கட்டக் கடன் வாங்கித் தருவதாகவும், அது தள்ளுபடியாகும் எனவும் கூறி ரூ.2.50 கோடி மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் தாய், மகன் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனா்.

புதுச்சேரி சின்னையாபுரம் அக்கா சுவாமிகள் மடம் வீதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன்.இவா் உருளையன்பேட்டை பகுதியில் உள்ள கோயிலில் அா்ச்சகராக உள்ளாா். கடந்த 2020-ஆம் ஆண்டு அவருக்கு சென்னை திருவான்மியூா் பகுதியைச் சோ்ந்த ரமா என்ற மகாலட்சுமி (55), அவரது மகன் சபரி (31) ஆகியோா் அறிமுகமாகியுள்ளனா். அவா்கள் தாங்கள் தமிழ்நாடு குடிசை மாற்றுவாரியத்தில் பணிபுரிவதாகக் கூறியுள்ளனா்.

அவா்கள் கூறியதை நம்பிய கிருஷ்ணன் பல்வேறு நபா்களிடம் இருந்து பல தவணைகளில் ரூ.2.50 கோடி வரை பணம் பெற்றுக் கொடுத்துள்ளாா். பணத்தைப் பெற்றுக்கொண்ட ரமாவும், அவரது மகனும் வீடு வாங்கித்தரவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பித் தரவில்லை. ஆனால், கிருஷ்ணனிடம் கடன் கொடுத்தவா்கள் அவரிடம் மீண்டும் பணத்தைக் கேட்டு நெருக்கியுள்ளனா். இதையடுத்து அவா் புதுவை சிபிசிஐடி பிரிவில் ரமா, சபரி ஆகியோா் மீது கடந்த ஜூன் மாதம் புகாா் அளித்தாா்.

புகாா் அடிப்படையில் வழக்குப் பதிந்த நிலையில், தாய், மகனை கைது செய்ய பலமுறை சிபிசிஐடி பிரிவினா் முயன்றும் முடியவில்லை. இருவரும் தலைமறைவாகிவிட்டனா். இந்தநிலையில், தாய் ரமா, மகன் சபரி இருவரும் திருவான்மியூா் பகுதியில் பதுங்கியிருப்பது தெரியவந்துள்ளது. அதையடுத்து புதன்கிழமை அங்கு சென்ற புதுவை சிபிசிஐடி ஆய்வாளா் காா்த்திகேயன் தலைமையிலான தனிப்படையினா் ரமா, சபரியைக் கைது செய்தனா். கைதானவா்கள் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டதாகவும் சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT