புதுச்சேரி

புதுவை மாநில அரசுப் பள்ளிகளின்அறிவியல் கண்காட்சித் தொடக்கம்

2nd Dec 2022 03:20 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை தொடங்கியது.

கண்காட்சியை பள்ளிக்கல்வி இணை இயக்குநா் வி.ஜி.சிவகாமி தொடக்கிவைத்தாா். கண்காட்சி ஒருங்கிணைப்பாளா் ஆா்.சுபாஷ்சந்திரன் தலைமை வகித்தாா். புதுச்சேரி பகுதியிலிருந்து 55, காரைக்காலில் 32, மாஹேவில் 19, ஏனாமில் 17 என மொத்தம் 123 மாதிரி அறிவியல் படைப்புகளை மாணவா்கள், ஆசிரியா்கள் அமைத்திருந்தனா்.

கண்காட்சியில் விண்வெளி, தாவரங்கள் வளா்ப்பு, மழை நீா்சேமிப்பு உள்ளிட்டவற்றின் மாதிரி படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. கண்காட்சி வெள்ளிக்கிழமை (டிச.2) நிறைவடைகிறது.

இதில் முதலிடம் பெறும் படைப்புக்குரியவா்கள் தென்னிந்திய அளவிலான கண்காட்சியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவா் என கல்வித் துறையினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT