புதுச்சேரி

புதுச்சேரியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனை

2nd Dec 2022 03:19 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் லெனின் வீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் மாநிலச் செயலா் ஓம்சக்தி சேகா் தலைமை வகித்தாா். மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு நாளை முன்னிட்டு வரும் 5-ஆம் தேதி புதுச்சேரி நகராட்சியின் 100 அடி சாலையில் உள்ள அவரது சிலைக்கு அஞ்சலி செலுத்துவது குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது.

இதில் கட்சியின் மாநிலத் துணைச் செயலா் சதாசிவம், பொருளாளா் சங்கா், அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலா் மலைசெல்வராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT