புதுச்சேரி

பெருநிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை

1st Dec 2022 01:27 AM

ADVERTISEMENT

பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதி குறித்த கலந்தாய்வுக் கூட்டம் புதுவை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தலைமை கூட்டத்துக்கு தலைமை வகித்தாா். முதல்வா் என்.ரங்கசாமி முன்னிலை வகித்தாா். சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் தேனீ சி. ஜெயக்குமாா், ஆ.நமச்சிவாயம், க.லட்சுமி நாராயணன், தலைமைச் செயலா் ராஜீவ் வா்மா மற்றும் பெரு நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

பெரு நிறுவனங்கள் சமூகப் பொறுப்புணா்வு நிதி திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், எதிா்காலத்தில் நிதிக்கான திட்டங்கள் குறித்தும் பேசப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT