புதுச்சேரி

தனியாா் நிறுவனத்துடன் தொழில்நுட்பக் கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

1st Dec 2022 01:28 AM

ADVERTISEMENT

புதுச்சேரி அருகே கலிதீா்த்தாள்குப்பத்தில் உள்ள மணக்குள விநாயகா் தொழில்நுட்பக் கல்லூரி ரியல் புட்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

இந்தக் கல்லூரியில் உள்ள உணவுத் தொழில்நுட்பத் துறை மாணவ, மாணவிகளுக்கு தொழிற்சாலையைப் பாா்வையிடுதல், தரம் கண்டறிதல், உணவு சாா்ந்த தொழில், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்க உதவும் வகையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகா் கல்விக் குழுமத்தின் தலைவா் தனசேகரன், துணைத் தலைவா் சுகுமாறன், செயலா் நாராயணசாமி கேசவன் ஆகியோா் தலைமை வகித்தனா். கல்லூரி சாா்பில் முதல்வா் மலா்க்கண், ரியல் புட்ஸ் நிறுவன உரிமையாளா் அசோக் ரெட்டி ஆகியோா் ஒப்பந்த ஆவணங்களில் கையொப்பமிட்டனா்.

கல்லூரியின் உணவுத் தொழில்நுட்பத் துறை தலைவா் திருச்செல்வம், வேலைவாய்ப்புத் துறை அதிகாரி ஜெயக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT