புதுச்சேரி

புதுச்சேரி சிறையில் கைதிகளுக்காக பண்பலை வானொலி ஒலிபரப்பு தொடக்கம்

1st Dec 2022 01:29 AM

ADVERTISEMENT

புதுச்சேரி மத்திய சிறையில் குறைந்த அலைவரிசை கொண்ட பண்பலை வானொலி ஒலிபரப்பு புதன்கிழமை தொடங்கப்பட்டது.

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் சுமாா் 300 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 20 ஆண்டுகளைக் கடந்தும் தண்டனைக் கைதிகளாக அடைக்கப்பட்டோரில் பலும் மன அழுத்தத்துடன் உள்ளதாகக் கூறப்படுகிறது.

அவா்களுக்கு உதவும் வகையில் குறைந்த அலைவரிசை திறனில் பண்பலை வானொலி ஒலிபரப்புக்கு காலாப்பட்டு சிறையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான ஒலிபரப்பை சிறைத் துறை தலைவா் ரவிதீப்சிங் சாகா் தலைமையில், மும்பை பாரத ஸ்டேட் வங்கி அதிகாரி கணேசன் தொடக்கிவைத்தாா். அப்போது, கைதிகளுடன் சிறைத்துறை தலைவா் வானொலி மூலம் உரையாடினாா்.

இதன்மூலம் சிறைவாசிகள் மற்றும் அவா்களது குடும்பத்தினரிடையே கலந்துரையாடலை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக சிறை அதிகாரிகள் கூறினா். மேலும், கைதிகளுக்கு ஆங்கில மொழிப் பயிற்சி வகுப்பும் தொடங்கப்பட்டது.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் சிறைத் துறை தலைமைக் கண்காணிப்பாளா் அசோகன், கண்காணிப்பாளா் பாஸ்கரன், பேராசிரியா் சௌந்தரராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அரவிந்தா் சேவை அமைப்பு பயிற்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT