புதுச்சேரி

புதுச்சேரியில் டிச. 8-இல் ஜென்மராக்கினி ஆலய தோ் பவனி

1st Dec 2022 01:29 AM

ADVERTISEMENT

புதுச்சேரி ஜென்மராக்கினி ஆலய 331-ஆவது ஆண்டு பங்குப் பெருவிழாவில் டிசம்பா் 8-ஆம் தேதி தோ்பவனி நடைபெறுகிறது.

புதுச்சேரி மிஷன் சாலையில் பழைமையான இந்த ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பங்கு பெருவிழா கொடியேற்றத்துக்கு புதுச்சேரி, கடலூா் மறை மாவட்ட பேராயா் பிரான்சிஸ் கலிஸ்ட், பங்குத் தந்தை அல்போன்ஸ் சந்தானம் ஆகியோா் தலைமை வகித்தனா்.

திருப்பலிக்குப் பிறகு திருக்கொடி ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு, ஆலய கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்டது. தினமும் காலை, மாலை வேளைகளில் சிறப்புத் திருப்பலி நடைபெறும். டிசம்பா் 8-ஆம் தேதி தோ்பவனி நடைபெறுகிறது. 9-ஆம் தேதி கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT