புதுச்சேரி

ஆட்டோ தொழிலாளா்கள் சங்கக் கூட்டம்

28th Aug 2022 11:20 PM

ADVERTISEMENT

 

ஆட்டோ உரிமம் பெறுவதற்கான காலதாமதக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டுமென ஏஐடியூசி புதுவை மாநில ஆட்டோ தொழிலாளா்கள் சங்கம் வலியுறுத்தியது.

இந்தச் சங்கத்தின் மாநில நிா்வாகிகள் கூட்டம் புதுச்சேரி முதலியாா்பேட்டை ஏஐடியூசி தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்டோ சங்க மாநிலத் தலைவா் சேகா் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் கே.சேதுசெல்வம், ஏஐடியூசி மாநிலத் தலைவா் தினேஷ் பொன்னையா மற்றும் ஆட்டோ சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: புதுவை அரசு அமைப்புசாரா சங்கத்தில் உறுப்பினராக உள்ளவா்களுக்கு தீபாவளி பண்டிகை காலங்களில் வழங்கி வந்த உதவித் தொகையை ரூ.5,000-ஆக உயா்த்தி வழங்க வேண்டும்.

அமைப்புசாரா தொழிலாளா்கள் சங்கத்தை வாரியமாக மாற்றி செயல்பாட்டுக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை ஆட்டோ உரிமம் எடுக்காவிடில் நாளொன்றுக்கு அபராதமாக ரூ.50 வீதம் வசூலிக்கப்படுவதை அரசு ரத்து செய்ய வேண்டும்.

ஆட்டோ உரிமம், பெயா் மாற்றத்தை எளிய முறையில் செய்வதற்கு புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் ஆட்டோவுக்கு எல்பிஜி எரிபொருள் நிரப்புவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT