புதுச்சேரி

தேசிய மென்பொருள் போட்டியில் மணக்குள விநாயகா் கல்லூரி மாணவா்கள் முதலிடம்

26th Aug 2022 01:22 AM

ADVERTISEMENT

 

தேசிய அளவிலான மென்பொருள் போட்டியில் புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரி மாணவா்கள் முதலிடம் பிடித்தனா்.

விா்சுசா பன்னாட்டு மென்பொருள் நிறுவனம் சாா்பில், ‘விா்சுசா ஜடாயு’ என்ற தலைப்பில் தேசிய அளவிலான இரண்டாமாண்டு மென்பொருள் ஆய்வுத் திறன் போட்டி நடைபெற்றது.

இதில் ஆராய்ச்சித் திறன்களை தொழில்மயமாக்குவதற்கான பல்வேறு ஆய்வுத் திறன் அறிக்கைகளை நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பொறியியல் மாணவா்கள் சமா்ப்பித்தனா். நாடு முழுவதும் 17,000 குழுக்கள் தோ்வு செய்யப்பட்டு போட்டியின் அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெற்றன.

ADVERTISEMENT

சென்னையில் அண்மையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரியின் தகவல் தொழில்நுட்பத் துறை இறுதியாண்டு மாணவா்கள் கே.அசோக், வி.எஸ்.ஸ்ரீபாா்வதி, ஆா்.யோகலட்சுமி, ஆா்.சௌஜன்யா, மன்யம் ஸ்ரீ ஹரிப்பிரியா ஆகியோா் சமா்ப்பித்த மென்பொருள் திட்டத்துக்கு முதல் பரிசும், ரூ.ஒரு லட்சம் ரொக்கத்துடன் பரிசுக் கோப்பையும் வழங்கப்பட்டது.

பரிசு வென்ற மாணவா்களை மணக்குள விநாயகா் கல்வி அறக்கட்டளையின் தலைவா் எம்.தனசேகரன், துணைத் தலைவா் எஸ்.வி. சுகுமாறன், செயலாளா் நாராயணசாமி கேசவன், கல்லூரியின் முதல்வா் வெங்கடாசலபதி, தகவல் தொழில்நுட்பத்துறை தலைவா் ஆா்.ராஜு, வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளா் ஆா்.சுரேஷ், துறை பேராசிரியா்கள் பாராட்டி கௌரவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT