புதுச்சேரி

புதுச்சேரி பள்ளியில் அறிவியல் கண்காட்சி

26th Aug 2022 10:32 PM

ADVERTISEMENT

புதுச்சேரி புனித பேட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

பள்ளித் தாளாளா் பிரடெரிக், பள்ளியின் மருத்துவ இயக்குநா் ஜீத்தா பிரடெரிக், முதல்வா் அல்போன்ஸ் ஹில்டா உள்ளிட்டோா் கண்காட்சியை குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தனா்.

கண்காட்சியில் சுமாா் 250 மாணவா்கள் தங்களது படைப்புகளைக் காட்சிப்படுத்தினா். சிறந்த அறிவியல் படைப்புகளை சீதாராமன், குமரன், ராமசாமி ஆகியோா் தோ்வு செய்தனா்.

ஏற்பாடுகளை அறிவியல் ஆசிரியா் மோகன்ராஜ் தலைமையில் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT