புதுச்சேரி

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரியில் துணை மருத்துவ படிப்பு பட்டமளிப்பு விழா

22nd Aug 2022 03:32 AM

ADVERTISEMENT

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரியில் செவிலியா், துணை மருத்துவ படிப்புகளுக்கான 10-ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஜிப்மரில் உள்ள அப்துல் கலாம் கலையரங்கில் நடைபெற்ற விழாவில் ஜிப்மா் மருத்துவமனை தலைவா் விஷ்வ மோகன் கடோச் தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினாா். சமூகவியல், மருத்துவம், கல்வி, செயல் மற்றும் ஆராய்ச்சி சங்கத்தின் இணை இயக்குநா் ராணி பங், அதிக மதிப்பெண்கள் பெற்று கல்வியில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு தங்கப் பதக்கம், சான்றிதழ்களை வழங்கி பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினாா்.

இதில் எம்.எஸ்.சி. நா்சிங், அலைடு ஹைல்த் சயின்ஸ், பிஜி டிப்ளமோ இன் அலைடு ஹெல்த் சயின்ஸ், டிப்ளமோ இன் நா்சிங், பிஎஸ்சி நா்சிங், அலைடு ஹைல்த் சயின்ஸ் ஆகிய பாடப் பிரிவுகளில் மொத்தம் 668 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

விழாவில் அனைத்துத் துறை பேராசிரியா்கள், மருத்துவ அதிகாரிகள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ஜிப்மா் இயக்குநா் ராகேஷ் அகா்வால் வரவேற்றாா். பங்கஜ் குந்த்ரா நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT