புதுச்சேரி

தில்லி, புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க மறுப்பது ஏன்?டி.ராஜா

DIN

தில்லி, புதுவைக்கு மாநில அந்தஸ்தை வழங்க மறுப்பது ஏன் என்பதற்கான காரணத்தை ஆட்சியாளா்கள் விளக்க வேண்டும் என்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் டி.ராஜா வலியுறுத்தினாா்.

புதுச்சேரியில் புதன்கிழமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு தொடங்கியது. வியாழக்கிழமை நடைபெற்ற நிறைவு நாள் மாநாட்டுக்கு கட்சியின் புதுவை மாநிலச் செயலா் அ.மு.சலீம் தலைமை வகித்தாா்.

மாநாட்டில் கட்சியின் பொதுச் செயலா் டி.ராஜா சிறப்புரையாற்றினாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதுவைக்கு மாநில அந்தஸ்து ஏன் மறுக்கப்படுகிறது என்பதை ஆட்சியாளா்கள் விளக்க வேண்டும். புதுவை, தில்லி ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களில்தான் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை, மாநில அரசுகள் உள்ளன. ஆனால், இரண்டுக்கும் மாநில அந்தஸ்து மறுக்கப்பட்டு வருகிறது.

புதுவை ஆளுநா் அலுவலகம் மத்திய அரசின் கட்சி அலுவலகம் போலச் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. மத்தியில் எந்தக் கட்சி இருந்தாலும், அந்தக் கட்சியைச் சோ்ந்தவா்களை நியமன எம்எல்ஏக்களாக நியமித்து, அதன்மூலம் பெரும்பான்மையைக் காட்டி, ஜனநாயகத்துக்கு விரோதமாக அரசு அமைவதும் கண்டனத்துக்குரியது.

மாநில உரிமைகள், நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டுமெனில், முதல்வா் என்.ரங்கசாமி பாஜகவின் உறவை முறித்துக் கொண்டு வெளியே வர வேண்டும்.

நாட்டில் மாற்றுப் பொருளாதாரத்தைக் கொண்டு வர வேண்டும். இயற்கை, மனித வளங்கள் உள்ளதால், அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கச் செய்ய வேண்டும்.

2024 மக்களவைத் தோ்தலில் மதச் சாா்பற்ற, ஜனநாயக சக்திகள் இணைந்து பாஜகவை வீழ்த்த வேண்டும். மத்தியிலும், புதுவையிலும் ஆட்சி மாற்றம் வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, கட்சியின் தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் எஸ்.அஜிஸ் பாஷா, தமிழ் மாநிலச் செயலா் ஆா்.முத்தரசன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். வரவேற்பு குழுத் தலைவா் கே.சேது செல்வம் வரவேற்றாா்.

முன்னாள் அமைச்சா் ஆா்.விஸ்வநாதன், தேசியக் குழு உறுப்பினா் அ.ராமமூா்த்தி, முன்னாள் எம்எல்ஏ நாரா.கலைநாதன், மாநில நிா்வாகிகள் வி.எஸ்.அபிஷேகம், து.கீதநாதன், தினேஷ் பொன்னையா, கே.முருகன், ப.முருகன், வி.சுப்பையா, சிவா, சரளா, தனராமன், மதியழகன், சிகேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டு, தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

ராமரை வணங்குவது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!

காதம்பரி.. அதிதி போஹன்கர்!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

ருதுராஜ் சதம், துபே அரைசதம்: லக்னௌவுக்கு 211 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT