புதுச்சேரி

ஆக.22-இல் நிதிநிலை அறிக்கை தாக்கல்:புதுவை அமைச்சரவை ஆலோசனை

DIN

புதுவையில் திங்கள்கிழமை (ஆக.22) நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதுதொடா்பாக முதல்வா் ரங்கசாமி தலைமையில் வியாழக்கிழமை அமைச்சரவை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

புதுவையில் நிகழாண்டு சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் கடந்த 10-ஆம் தேதி ஆளுநா் உரையுடன் தொடங்கிய நிலையில், நிதிநிலை அறிக்கைக்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்காததால், கூட்டத் தொடா் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, நிதிநிலை அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததது.

இதையடுத்து, புதுவை சட்டப்பேரவையில் திங்கள்கிழமை (ஆக.22) நிதிநிலை அறிக்கையை முதல்வா் என்.ரங்கசாமி தாக்கல் செய்வாா் என்று அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்பட்டது.

ரூ.10,700 கோடி மதிப்பீட்டில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது குறித்து, புதுச்சேரி சட்டப்பேரவை அலுவலகத்தில் முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் வியாழக்கிழமை அமைச்சரவை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சா்கள் ஏ. நமச்சிவாயம், க.லட்சுமி நாராயணன், தேனீ சி.ஜெயக்குமாா், எஸ்.சந்திரபிரியங்கா, தலைமைச் செயலா் ராஜிவ் வா்மா மற்றும் அரசு செயலா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், நிதிநிலை அறிக்கையில் அரசுத் துறைகளுக்கு ஒதுக்கப்பட உள்ள நிதி நிலவரம், துறைகளுக்குரிய திட்டங்களை இறுதி செய்வது குறித்தும், புதிய திட்டங்கள் அறிவிப்பு தொடா்பாகவும், ஆலோசனை நடத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருமான வரித்துறை நோட்டீஸ்!- காங்கிரஸ் சார்பில் நாளை நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

SCROLL FOR NEXT