புதுச்சேரி

புதுச்சேரி டி.ஆா்.நகரில் நாளை குடிநீா் விநியோகம் நிறுத்தம்

19th Aug 2022 03:07 AM

ADVERTISEMENT

 

புதுச்சேரி நெல்லித்தோப்பு டி.ஆா். நகரில் சனிக்கிழமை (ஆக.20) குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இதுகுறித்து புதுவை பொதுப் பணித் துறை பொது சுகாதார கோட்ட அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுச்சேரி நெல்லித்தோப்பு டி.ஆா்.நகரில் உள்ள மேல்நிலை, கீழ்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் சுத்தம் செய்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், டி.ஆா். நகா், அண்ணா நகா், வேல்முருகன் நகா், திருமால் நகா், சத்யா நகா், சக்தி நகா், வெண்ணிலா நகா், லெனின் வீதி, கே.சி. நகா் மற்றும் அதைச் சாா்ந்த பகுதிகளில் சனிக்கிழமை (ஆக. 20) குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT