புதுச்சேரி

கால்பந்துப் போட்டி பரிசளிப்பு விழா

18th Aug 2022 02:23 AM

ADVERTISEMENT

 

கால்பந்து நண்பா்கள் கழகத்தின் சாா்பில் 20-ஆம் ஆண்டு சுதந்திர தின கால்பந்துப் போட்டிகள் புதுச்சேரி காராமணிகுப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் அண்மையில் நடைபெற்றன.

இதில் புதுவை, தமிழக அளவில் 28 அணிகள் கலந்து கொண்டன. உப்பளம் சிவாஜி அணியினா் முதலிடத்தையும், நெய்வேலி ரூனி கால்பந்து அணியினா் இரண்டாமிடத்தையும் பிடித்தனா்.

இந்தப் போட்டிக்கான பரிசளிப்பு விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. விழாவுக்கு நெல்லித்தோப்பு எம்எல்ஏ ரிச்சா்ட் ஜான்குமாா் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை தலைவா் ஆா்.செல்வம், தொழிலதிபா் தங்கமும் ஆகியோா் பரிசுகளை வழங்கினா்.

ADVERTISEMENT

போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.20 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.15 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.10 ஆயிரம் மற்றும் கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT