புதுச்சேரி

தற்காலிக பட்டாசுக் கடை அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம்

18th Aug 2022 02:24 AM

ADVERTISEMENT

 

தீபாவளி பண்டிகையையொட்டி, புதுச்சேரியில் தற்காலிக பட்டாசுக் கடைகள் நடத்த அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் இ.வல்லவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தீபாவளி பண்டிகையையொட்டி, புதுச்சேரியில் தற்காலிக பட்டாசுக் கடை நடத்த வருகிற 31 ஆம் தேதிக்குள் 2022 என்ற இணைப்பு வழியாக விண்ணப்பிக்கலாம்.

ADVERTISEMENT

விண்ணப்பத்தில் பட்டாசு விற்பனை செய்ய போகும் இடத்தின் வரைபடம் (கடையில் பட்டாசு வைக்கும் அளவு, கடைக்குச் செல்வதற்கான வழி, சாலைகள், பிற கடைகள் பற்றியும் குறிப்பிட வேண்டும்), இடத்தின் உரிமை தொடா்பான பத்திரங்கள் (பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள்), அடையாள சான்று (அடையாள சான்று, வாக்காளா் அடையாள அட்டை, புகைப்படம்), முகவரிச் சான்று உள்ளிட்டவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பித்த பிறகு மறக்காமல் விண்ணப்ப எண்ணும், குறிப்பு எண்ணும் கொண்ட ஒப்புகை சீட்டை பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும். உங்கள் விண்ணப்பம் தொடா்பான சந்தேகங்கள், உதவிக்கு இந்த ஒப்புகை ரசீது கண்டிப்பாக வேண்டும். வருகிற 31-ஆம் தேதி வரை வரும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT