புதுச்சேரி

புதுவையில் ஓராண்டில் 2 ஆயிரம் நிறுவனங்கள் மூடல்:மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டு

DIN

புதுவையில் கடந்தாண்டு 2000-க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு, ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் வேலையிழந்ததாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியது.

இதுகுறித்து அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் ஆா்.ராஜாங்கம் வெளியிட்ட அறிக்கை:

புதுச்சேரி இந்திய இணைப்பு தினமான ஆக.16-இல் தியாகிகளின் இலக்குகள், லட்சியங்களை நிறைவேற்ற சூளுரைப்போம். மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு மத்திய அரசிடம் குவிக்கப்படுகிறது. தற்போது புதுவைக்கு ஏற்பட்ட நிலை பிற மாநிலங்களுக்கும் ஏற்படலாம்.

புதுவையில் ஆளுநா் தலைமையில் ஓா் ஆட்சியும், முதல்வா் தலைமையில் ஓா் ஆட்சியும், மத்திய அரசு அதிகாரிகளின் ஆட்சி என மூன்று ஆட்சிகள் நடைபெறுகின்றன.

இதனால், ஒரு புதிய திட்டமும், வேலைவாய்ப்பும் இல்லாமல் மக்கள் தவிக்கின்றனா். புதுவையில் கடந்தாண்டு மட்டும் 2000-க்கும் அதிகமான சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. அதில் பணியாற்றிய ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் வேலையிழந்தனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT