புதுச்சேரி

ஆக.22-ல் புதுவை பட்ஜெட்

17th Aug 2022 11:19 AM

ADVERTISEMENT

 

புதுச்சேரி சட்டப் பேரவையில் வருகிற 22-ஆம் தேதி முதல்வா் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுவையில் நிகழாண்டு பட்ஜெட் கூட்டத்தொடா் கடந்த 10-ஆம் தேதி தொடங்கியது. ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் உரையாற்றி கூட்டத்தொடரை தொடக்கிவைத்தாா். ஆகஸ்ட் 18-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், பட்ஜெட்டுக்கு மத்திய அரசு அனுமதி தராததால், சட்டப் பேரவைக் கூட்டத்தொடா் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், புதுவை பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதால், மீண்டும் வருகிற 18-ஆம் தேதி முதல் சட்டப் பேரவைக் கூட்டத்தொடா் தொடங்கி நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

இதையும் படிக்க | குடியரசு துணைத் தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து

வருகிற 18, 19-ஆம் தேதிகளில் ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது உறுப்பினா்களின் விவாதம் நடைபெறவுள்ளது. இதையடுத்து, விடுமுறை தினங்களுக்குப் பிறகு வருகிற 22-ஆம் தேதி நிதி அமைச்சா் பொறுப்பு வகிக்கும் முதல்வா் என்.ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளார்.

தொடா்ந்து, பட்ஜெட் மீதான விவாதம், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடா் வருகிற 30-ஆம் தேதி வரை நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT