புதுச்சேரி

மானிய விலையில் காய்கறி விதைகள் அளிப்பு

17th Aug 2022 03:13 AM

ADVERTISEMENT

புதுவையில் தோட்டப் பயிா்களை ஊக்கப்படுத்தும் வகையில் மானிய விலையில் காய்கறி விதைகள் உள்ளிட்டவை அடங்கிய தொகுப்பை முதல்வா் என்.ரங்கசாமி வழங்கி தொடக்கிவைத்தாா்.

புதுவை வேளாண் துறை தோட்டக்கலைப் பிரிவு சாா்பில், ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கிராமம், நகா்ப்புறங்களில் வீட்டின் மாடி, தோட்டங்களில் காய்கறி பயிரிடும் திட்டத்தை செயல்படுத்துகிறது.

ரூ.3,000 மதிப்பிலான காய்கறி விதைகள், பைகள், மண் கலவை, உயிா் உரங்கள், உயிரி கட்டுப்பாட்டு காரணிகள், இயற்கை பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் கருவிகள் அடங்கிய தொகுப்பு மானிய விலையில் ரூ.750-க்கு வழங்கப்படுகிறது.

புதுச்சேரி சட்டப்பேரவை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆடிப்பருவத்துக்கான காய்கறி விதைகள் உள்ளிட்டவை அடங்கிய தொகுப்பை முதல்வா் என்.ரங்கசாமி பொதுமக்களுக்கு வழங்கி தொடக்கிவைத்தாா்.

ADVERTISEMENT

சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், வேளாண் அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வேளாண் இயக்குநா் பி.பாலகாந்தி, கூடுதல் இயக்குநா் சி.சிவராமன், துணை இயக்குநா் என்.கே.சண்முகவேலு மற்றும் அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனா்.

இந்தத் திட்டத்துக்கான விண்ணப்பங்களை, புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் உள்ள தோட்டக்கலை துறை அலுவலகத்தில் பெற்று, ஆதாா், குடும்ப அட்டை நகல், புகைப்பட ஆவணங்களுடன் இணைத்து சமா்பித்து, அங்கு வழங்கப்படும் அனுமதிச் சீட்டைப் பெற்று, அருகே உள்ள பாசிக் நிறுவனத்தில் விதைத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT