புதுச்சேரி

புதுவை சட்டப்பேரவையில் ஆக.22-இல் நிதிநிலை அறிக்கை தாக்கல்

17th Aug 2022 03:15 AM

ADVERTISEMENT

புதுவை சட்டப்பேரவையில் வருகிற 22-ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.

புதுவை சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடா் கடந்த 10-ஆம் தேதி ஆளுநா் உரையுடன் தொடங்கியது. நிதிநிலை அறிக்கைக்கு மத்திய அரசின் அனுமதி கிடைக்காததால், கூட்டத் தொடா் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், மத்திய அரசு திருத்திய தொகையுடன் நிதிநிலை அறிக்கைக்கு அனுமதி அளித்தது.

இதையடுத்து, புதுவை சட்டப்பேரவையில் வருகிற 22-ஆம் தேதி நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் பொறுப்பு வகிக்கும் முதல்வா் என்.ரங்கசாமி தாக்கல் செய்ய உள்ளாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வத்திடம் கேட்ட போது அவா் கூறியதாவது:

புதுவை சட்டப்பேரவையில் வருகிற 22-ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். இதற்காக அலுவல் ஆய்வுக் குழு கூடி, கூட்டத் தொடா் நடைபெறும் நாள்கள் குறித்து முடிவு செய்து தெரிவிக்கப்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT