புதுச்சேரி

பயனாளிகளுக்கு சொத்து அடையாள அட்டை

DIN

மத்திய அரசின் ஸ்வமித்வா திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு சொத்து அடையாள அட்டைகளை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை வழங்கினாா்.

புதுச்சேரி பிராந்தியத்தின் 5 கொம்யூன் பஞ்சாயத்துகளில் உள்ள 67 வருவாய் கிராமங்களிலும், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 கொம்யூன் பஞ்சாயத்துக்குள்பட்ட 29 வருவாய் கிராமங்களிலும் முதல் கட்டமாக ட்ரோன் மூலம் இலவச மனைப்பட்டா குடியிருப்புகளில் நில அளவை செய்து, அங்கு வசிக்கும் மக்களுக்கு சொத்து அடையாள அட்டை வழங்கப்படும். இதைப் பயன்படுத்தி அவா்கள், வங்கிகளில் எளிமையாக கடன் பெறலாம்.

அதன்படி, இலவச மனைப் பட்டா குடியிருப்புப் பகுதிகளில் ஸ்வமித்வா திட்டத்தில் சொத்து அடையாள அட்டை வழங்கும் தொடக்க நிகழ்ச்சி புதுச்சேரியில் சட்டப்பேரவை வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மண்ணாடிப்பட்டு தொகுதியைச் சோ்ந்த 127 பயனாளிகளுக்கு முதல்வா் என்.ரங்கசாமி சொத்து அடையாள அட்டைகளை வழங்கி, திட்டத்தைத் தொடக்கிவைத்தாா்.

உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், மாவட்ட ஆட்சியா் இ.வல்லவன், நில அளவைத் துறை இயக்குநா் எம்.எஸ்.ரமேஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். இந்தத் திட்டத்தின் கீழ் 9,000 பயனாளிகள் பயன்பெறுவா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 5 மணி நிலவரம்: 63.20% வாக்குகள் பதிவு!

வாக்களித்த திரைப் பிரபலங்கள் - புகைப்படங்கள்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தங்கும் விடுதிகளில் போலீஸாா் சோதனை

வடகிழக்கு மாநிலங்களில் விறுவிறு வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT