புதுச்சேரி

நெல்லித்தோப்பு விண்ணேற்பு அன்னை ஆலய தேர் பவனி

DIN

புதுச்சேரி: புதுச்சேரி நெல்லித்தோப்பில் புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தின் 171-வது ஆண்டு பெருவிழாவையொட்டி நடைபெற்ற ஆடம்பர தேர்பவனியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பில் பழமை வாய்ந்த புனித விண்ணேற்பு அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 171-வது ஆண்டு பெருவிழா கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை தொடர்ந்து நாள்தோறும் காலை மாலை சிறப்பு திருப்பலிகளும், மாலை நேரங்களில் சிறிய தேர் பவனி நடைபெற்று வந்தன. 

இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஆண்டு பெருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடம்பர தேர் பவனி இன்று நடைபெற்றது. அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஆடம்பர திருத்தேரில் விண்ணேற்பு அன்னையின் சொரூபம் வைக்கப்பட்டு சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. 

இதைத்தொடர்ந்து ஆடம்பர தளர்பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு கிறிஸ்தவ பாடல்களை பாடியவாறு தேருடன் ஊர்வலமாக சென்றனர். முக்கிய வீதிகளின் வழியாக சென்ற திருத்தேர் இறுதியில் ஆலய வளாகத்தில் நிறைவுபெற்றது. 

இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆலய நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT