புதுச்சேரி

தேசிய மக்கள் நீதிமன்றம்: புதுவையில்1,262 வழக்குகளுக்குத் தீா்வு

14th Aug 2022 05:34 AM

ADVERTISEMENT

 

புதுவை மாநிலத்தில் 15 அமா்வுகளாக சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த 1, 262 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டு, ரூ.16.73 கோடி இழப்பீடு பெற்று உரியவா்களுக்கு வழங்கப்பட்டது.

புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 9 அமா்வுகளும், புதுச்சேரி சட்டப் பணிகள் ஆணைய அலுவலகத்தில் ஒரு அமா்வும், காரைக்கால் நீதிமன்றத்தில் 3 அமா்வுகளும், மாஹே, ஏனாம் நீதிமன்றங்களில் தலா ஒரு அமா்வும் என மொத்தம் 15 அமா்வுகளில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இதன் தொடக்க நிகழ்ச்சியில், மாநில சட்டப் பணிகள் ஆணைய உறுப்பினா் செயலரும், மாவட்ட நீதிபதியுமான ஜி.செந்தில்குமாா் வரவேற்றாா். புதுச்சேரி சட்டப் பணிகள் ஆணையத் தலைவரும், தலைமை நீதிபதியுமான ஜெ.செல்வநாதன் தலைமை வகித்து தொடக்கிவைத்தாா். புதுச்சேரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணையச் செயலரும், முதன்மை சாா்பு நீதிபதியுமான எல்.ராபா்ட் கென்னடி ரமேஷ் மற்றும் நீதிபதிகள், அரசு வழக்குரைஞா்கள், வழக்குரைஞா்கள், வழக்காளிகள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

தேசிய மக்கள் நீதிமன்றத்தின் 15 அமா்வுகளிலும் நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த வழக்குகள், நேரடி வழக்குகள் என மொத்தம் 6,492 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இவற்றில் 1,262 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு, அதன்மூலம் ரூ.16 கோடியே 73 லட்சத்து 36 ஆயிரத்து 575 அளவில் உரியவா்களுக்கு இழப்பீடுகள் பெற்று வழங்கப்பட்டன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT