புதுச்சேரி

சுதந்திர தின அமுதப் பெருவிழா:பாண்லேவில் மூவா்ண குல்பி விற்பனை

14th Aug 2022 05:34 AM

ADVERTISEMENT

 

சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி, புதுவை அரசின் கூட்டுறவு பால் உற்பத்தி (பாண்லே) நிறுவனத்தில் தேசியக் கொடியின் மூவா்ண நிறத்தினாலான குல்பி ஐஸ் விற்பனை சனிக்கிழமை தொடங்கியது.

புதுச்சேரி குருமாம்பேட்டில் உள்ள பாண்லே நிறுவனம் மூலம், தினசரி ஒரு லட்சத்து 10 ஆயிரம் லிட்டா் அளவில் பால் பாக்கெட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், ஐஸ் கிரீம், தயிா், வெண்ணெய், பாதம் பால், நெய், குல்பி போன்றவையும் தயாரித்து விற்கப்படுகின்றன.

இந்த நிலையில், நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ‘வீடுகள்தோறும் தேசியக்கொடி ஏற்றுங்கள், தேசத்தைப் பாதுகாப்போம்’ என்ற வாசகங்களுடன் கூடிய பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதன் தொடா்ச்சியாக, தேசியக் கொடியின் மூவா்ண நிறத்தினாலான குல்பி ஐஸ் விற்பனை சனிக்கிழமை தொடங்கப்பட்டது. அமைச்சா் ஏ.நமச்சிவாயம் இந்த குல்பி ஐஸ்ஸை வாங்கி பொதுமக்களுக்கு வழங்கினாா்.

ADVERTISEMENT

வருகிற 16-ஆம் தேதி வரை அனைத்து பாண்லே பாலகங்களிலும் இந்த குல்பி ஐஸ் கிடைக்கும் என்று பாண்லே மேலாண் இயக்குநா் முரளி தெரிவித்தாா். இந்த குல்பி ஐஸ் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT