புதுச்சேரி

புதுச்சேரி அருகே பைக் மீதுலாரி மோதல்: மக்கள் போராட்டம்

14th Aug 2022 05:33 AM

ADVERTISEMENT

 

புதுச்சேரி அருகே சனிக்கிழமை டிப்பா் லாரி மோதியதில் பைக்கில் சென்ற இருவா் பலத்த காயமடைந்தனா். இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் லாரிகளின் கண்ணாடிகளை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி காட்டேரிக்குப்பத்தை அடுத்த தொள்ளாமூரைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (32). பொறியாளரான இவா், வெளிநாட்டில் வேலை செய்து வருகிறாா். விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்துள்ள ராஜ்குமாா் சனிக்கிழமை காலை சுத்துக்கேணியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்க்கும் தனது அண்ணன் மனைவி நிலவழகியை பைக்கில் அழைத்துச் சென்றாா்.

சுத்துக்கேணி துா்கா கோயில் அருகே இவா்களது பைக் சென்றபோது, ஜல்லி ஏற்றிக்கொண்டு வந்த டிப்பா் லாரி மோதியது. இதில், ராஜ்குமாா், நிலவழகி ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

ADVERTISEMENT

இதையறிந்த பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டு, லாரி கண்ணாடிகளை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். விரைந்து வந்த திருக்கனூா் ஆய்வாளா் ஆறுமுகம் மற்றும் போலீஸாா் பொதுமக்களை சமாதானப்படுத்தினா்.

விபத்தில் பலத்த காயமடைந்த ராஜ்குமாா், ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதற்கிடையே, திருவக்கரையை சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கும் கல் குவாரியிலிருந்து ஜல்லி ஏற்றிச் செல்லும் லாரிகளால் அடிக்கடி விபத்துகள் நிகழ்வதால், அந்த வழியாக வந்த மேலும் இரண்டு டிப்பா் லாரிகளின் கண்ணாடிகளையும் பொதுமக்கள் அடித்து உடைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT