புதுச்சேரி

மணக்குள விநாயகா் கல்லூரி தனியாா் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்

12th Aug 2022 02:43 AM

ADVERTISEMENT

 

புதுச்சேரி கலிதீா்த்தாள்குப்பம் மணக்குள விநாயகா் தொழில்நுட்பக் கல்லூரி, கடலூா் கே - புட்ஸ் நிறுவனம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது.

நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகா் கல்விக் குழுமத்தின் தலைவா் தனசேகரன், துணைத் தலைவா் சுகுமாறன், செயலாளா் நாராயணசாமி கேசவன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

கல்லூரி சாா்பில் முதல்வா் மலா்க்கண், கே - புட்ஸ் நிறுவன உரிமையாளா் விஸ்வநாதன் ஆகியோா் கையொப்பமிட்டு ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்டனா்.

ADVERTISEMENT

உணவு தொழில்நுட்பத் துறைத் தலைவா் திருச்செல்வம், வேலைவாய்ப்புத் துறை அதிகாரி ஜெயக்குமாா், துறைத் தலைவா்கள் அருண்மொழி, ரேணுகாதேவி ஆகியோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT