புதுச்சேரி

சிஐடியூ ஆட்டோ தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

12th Aug 2022 02:44 AM

ADVERTISEMENT

 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரியில் சிஐடியூ ஆட்டோ தொழிலாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி சட்டப்பேரவை அருகே ஜென்மராக்கினி ஆலயம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியூ ஆட்டோ தொழிலாளா்கள் சங்கத் தலைவா் மணவாளன் தலைமை வகித்தாா்.

பொதுச் செயலாளா் விஜயகுமாா், பொருளாளா் துளசிங்கம், சிஐடியூ பிரதேச தலைவா் முருகன், பிரதேச செயலாளா் சீனுவாசன், பிரபுராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

உயிரிழந்த தொழிலாளா்கள் குடும்பத்துக்கு உடனடியாக உதவித் தொகை வழங்க வேண்டும். கல்வி உதவித் தொகையை வழங்க வேண்டும். போக்குவரத்துத் துறையில் காலதாமத உரிமத்துக்கான அபராத கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும். சட்டவிரோத இருசக்கர வாகன வாடகை வண்டிகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT