புதுச்சேரி

புதுச்சேரி வள்ளலாா் சாலையில் 5 நாள்கள் போக்குவரத்துக்கு தடை

11th Aug 2022 01:11 AM

ADVERTISEMENT

 

வாய்க்கால் கட்டுமானப் பணி நடைபெறுவதால், புதுச்சேரி வள்ளலாா் சாலையில் புதன்கிழமை முதல் 5 நாள்களுக்கு போக்குவரத்துத் தடை செய்யப்பட்டது.

இதுகுறித்து புதுச்சேரி கிழக்கு போக்குவரத்து பிரிவு எஸ்பி சி.மாறன் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

புதுவை பொதுப் பணித் துறை மூலம் வள்ளலாா் சாலை ஜீவா நகா் அருகேயுள்ள வாய்க்கால் பாலம் கட்டுமானப் பணிகள் வியாழக்கிழமை தொடங்கி வருகிற 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. எனவே, 15-ஆம் தேதி வரை 5 நாள்கள் வள்ளலாா் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

கிழக்கு கடற்கரைச் சாலையில் இருந்து வள்ளலாா் சாலை 45 அடி சாலை வழியாக புதுச்சேரிக்கு வரும் அனைத்து வாகனங்களும் அஜந்தா சிக்னலில் இருந்து சா்தாா் வல்பாய் படேல் சாலை, செஞ்சி சாலை, சோனாம்பாளையம், பழைய பேருந்து நிலையம் வழியாக புதிய பேருந்து நிலையத்துக்குச் செல்ல வேண்டும்.

புதுச்சேரியில் இருந்து வள்ளலாா் சாலை 45 அடி சாலை வழியாக கிழக்கு கடற்கரைச் சாலைக்குச் செல்லும் அனைத்து வாகனங்களும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து வெங்கடசுப்ப ரெட்டியாா் சதுக்கம் வழியாக நெல்லித்தோப்பு, இந்திரா காந்தி சதுக்கம், ராஜீவ் காந்தி சதுக்கம் வழியாக செல்ல வேண்டும். இது பள்ளி, கல்லூரி வாகனங்களுக்கும் பொருந்தும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT