புதுச்சேரி

புதுவை பட்ஜெட் கூட்டத்தொடர் சற்றுநேரத்தில் தொடக்கம்

10th Aug 2022 08:55 AM

ADVERTISEMENT

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்னும் சற்றுநேரத்தில் தொடங்கவுள்ளது.

புதுவையில் 15-வது சட்டப்பேரவையின் 3-வது கூட்டத்தொடர், இன்று காலை 9:30 துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் துவங்குகிறது. தொடர்ந்து, ஆளுநர் உரையின் மீதான விவாதம் இரண்டு நாள்கள் நடைபெறவுள்ளது.

மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும், ஆகஸ்ட் 17ஆம் தேதி முழுமையான பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில், எத்தனை நாள்கள் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடத்துவது என தீர்மானித்து முடிவு செய்து பின்னர் அறிவிக்கப்படும்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | பிரதமா், மத்திய அமைச்சா்களுடன் புதுவை முதல்வா் ரங்கசாமி சந்திப்பு, மாநிலத்துக்கு கூடுதல் நிதியுதவி வழங்க வலியுறுத்தல்

சட்டப்பேரவைக்குள் பதாகைகள், முழக்கம் இடுவது போன்றவை தடை செய்யப்படுவதாக பேரவைத் தலைவர் ஆர்.செல்வம் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT