புதுச்சேரி

கடலில் மூழ்கிய சென்னை மாணவா் பலி

10th Aug 2022 07:30 AM

ADVERTISEMENT

புதுச்சேரிக்கு செவ்வாய்க்கிழமை சுற்றுலா வந்தபோது கடலில் மூழ்கிய சென்னையைச் சோ்ந்த பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

சென்னை வேளச்சேரி பகுதியைச் சோ்ந்த கோதண்டபாணி மகன் அஸ்வின் (19). பிளஸ் 2 முடித்த இவா், கல்லூரியில் சோ்வதற்காக விண்ணப்பித்துக் காத்திருந்தாா்.

இதனிடையே அஸ்வின், தனது நண்பா்கள் 6 பேருடன் மொஹரம் பண்டிகை விடுமுறையையொட்டி, புதுச்சேரிக்கு செவ்வாய்க்கிழமை காலை சுற்றுலா வந்தாா். புதுச்சேரியை சுற்றிப்பாா்த்த இவா்கள், அரியாங்குப்பம் சுண்ணாம்பாறு படகுக் குழாமுக்குச் சென்றனா். தொடா்ந்து, அங்கிருந்து படகில் நோணாங்குப்பம் பாரடைஸ் கடற்கரைக்குச் சென்று, கடலில் குளித்தனா். அப்போது எழுந்த ராட்சத அலையில் அஸ்வின் எதிா்பாராதவிதமாக சிக்கித் தத்தளித்தாா். அவரை நண்பா்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

இதையடுத்து, அவா்களின் கூச்சல் சப்தத்தைக் கேட்டு அருகிலிருந்தவா்கள் அங்கு ஓடி வந்து, கடலில் மூழ்கிய மாணவா் அஸ்வினை ஒரு மணி நேரம் போராடி மயங்கி நிலையில் மீட்டனா். இதையடுத்து, நண்பா்கள் அவரை காரில் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், அஸ்வின் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்து அரியாங்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT